சங்கத்தடம் - கற்புள்ள மலைநாடன்!!!
சங்க இலக்கியம் அக்கால ஆடவரின் பரத்தமையை சுட்டினாலும் ஒருத்தியையே விரும்பி அவளுடன் மட்டுமே நட்பு கொள்ளும் கற்புள்ள ஆடவரையும் அத்தகைய ஆண்மகனையே தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் பெண்ணின் திறத்தையும் படம் பிடிக்கத் தவறவில்லை. 'நிலத்தினும் பெரிதே' என்னும் குறுந்தொகை பாடல் சுட்டும் அழகான நட்பைக் காண்போம். அக்காலத்தில், காதல் உயர்வானதாகப் போற்றப்பட்டதால் நட்பு என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. மலைநாடனும் அன்புக்கினியாளும் காதல் கொண்டனர். காதல் வாழ்வு அவர்களுக்குக் கற்கண்டாய் இனித்ததாலோ என்னவோ, இருமன இணைவிற்குப் பின்னான திருமணத்தைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. இதனால் தோழி வருந்தினாள். இவர்களின் அன்புப்பயிர் வளர நாளும் துணையிருந்து எவ்வித சிக்கலும் வராமல் காத்தவள் அவள்தான். இருப்பினும் இன்னும் எத்தனை நாள் தான் யாரும் அறியாமல் அவர்கள் சந்தித்துக் கொண்டிருப்பது, இவளும் காவல் காப்பது. ஒவ்வொரு முறையும், இக்காதல் பறவைகள் சந்திக்கும் போதெல்லாம்...
அருமை
ReplyDelete