உரைத்தடம் - பெண்திண்ணி
பெண்திண்ணி!!!
அங்கிள் வலிக்குது அங்கிள்! வேணா அங்கிள்!..,
அண்ணா என்னை விட்டுடுங்கண்ணா!.. ,
ஃப்ரெண்டுனு நம்பித்தானே வந்தேன்!...,
நீ என் பேரன் மாதிரிடா பாவி!..அண்ணா என்னை விட்டுடுங்கண்ணா!.. ,
ஃப்ரெண்டுனு நம்பித்தானே வந்தேன்!...,
எனப் பச்சைக் குழந்தையிலிருந்து பல்லு போன பாட்டி வரை கதறும் கோலம் தணியும் காலம் எப்போது?
தினம் தினம் எத்தனையோ பெண்களின் உடல், அவர்கள் விருப்பம் இல்லாமலேயே சூறையாடப்பட்டு, சிதைக்கப்படும் செய்திகளை அறிய நேரும்போது மனிதராய் வாழும் ஒவ்வொருவரின் மனமும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறது. உடல்வெறி பிடித்துத் தன் புலன்களை அடக்க இயலாமல் பிணந்திண்ணி போல் பெண்ணுடலைத் திண்பவர்களைப் பெண்திண்ணி என்றே சொல்லத் தோன்றுகிறது.
பிணந்திண்ணிகள் கூட, இறந்த உடலைத்தான் உணவாக உண்ணுகிறது. ஆனால் இப்பெண்திண்ணிகளோ தன்னைப் போன்று உயிரும் உணர்வும் உள்ள சக மனிதியின் உடல் மீதல்லவா தாக்குதல் நடத்துகின்றனர். இப்படி கடுமையாகச் சாடுவது நாகரிகக் குறைவாகத் தோன்றினாலும், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், "கற்பழிக்கப்பட்டு பெண் கொலை! கயவனுக்கு வலை!!" என எதுகை மோனையுடன் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி பேசுவதும், அவள் வாழ்க்கை வரலாற்றைத் துப்பு துலக்குவதும், அவளைத் தங்கள் வாய்க்கு அவலாக்குவதுமான இழிந்த அநாகரிகம் போலில்லை. இழிந்தவற்றைத் தேடித் தின்னும் பன்றியே இது போன்ற அநாகரிகர்களை விட மேல் என எண்ணத் தோன்றுகிறது. குற்றம் செய்த ஆண்களை வெளிப்படுத்தி அவரிடம் இருந்து பெண்களையும் சமுகத்தையும் காப்பதை மறந்த இழிவான நடைமுறைகளால், பெண்ணை வன்கொடுமை செய்பவருக்கு, சிறிது கூட குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை, இதில் எங்கிருந்து பயம் வந்து திருந்துவது....பெண்ணை வெறும் உடலாக மட்டுமே, பார்க்கும் மனநிலை மாறுவது?

அக்காலத்தில் பெரியவர்கள் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாகச் சொல்வார்கள். தனியாக போகாதே, பொழுது பொய் போகாதே,..போனா பேய் பிடிச்சிரும், பிசாசு அடிச்சிரும்னு. ஆனால் இக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்பிள்ளைகளுக்குத் தான் இப்படி சொல்லிச் சொல்லி வளர்க்கவேண்டியிருக்கிறது. பேய் பிசாசுக்கு பயந்து அல்ல. அதை விடக் கொடுமையாகப் பெண்ணுடலைத் தின்னும் பெண் திண்ணிகளுக்கு பயந்து.
இத்தகைய வக்கிரம் பிடித்தவர்களை இனம் கண்டாவது, பெண்களை எச்சரித்துக் காக்கலாம், என்றால் இக்கொடுரர்களை விலங்கு என்றோ மனிதன் என்றோ எவ்வினத்திலும் சேர்த்து அடையாளப்படுத்த மனம் ஒப்பவில்லை. இருப்பினும் பிணந்திண்ணி, எறும்புத்திண்ணிகளைக் கூட அடையாளம் கண்டுவிடலாம், ஆனால் இந்தப் பெண்திண்ணிகள் தங்கள் வக்கிரத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், எவர் கண்களுக்கும் புலப்படாமல், அடையாளம் காட்ட ஒரு பட்டபெயரும் கூட இல்லாமல் உலகில் நடமாடுகின்றனர். மேலும் இப்பெண்திண்ணிகள் ஒரு பெண்ணுடலில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்ல.... எங்கோ ஓரிடத்தில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் உறவாய் அவளுடனேயே இருப்பவர்களாகவும் உள்ளனர். சக மனிதனாய் அவளுடனே நடமாடவும் செய்கின்றனர். மனிதனைப் போலவே இருப்பதனால் மனிதக் கூட்டத்தில் இப்பெண்திண்ணிகளை அடையாளம் காணவும் இயலவில்லை, பெண்களைக் காக்கவும் முடிவதில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.
அதனால் தானோ... எல்லா வகையிலும், அறங்களை நுட்பமாக கண்டுபிடித்துச் சொன்ன வள்ளுவரும், கயவனை அடையாளம் காண என்னால் கூட முடியவில்லையே, அவன் மனிதனைப் போலவே... இருக்கின்றானே! என மனம் நொந்து, "மக்களே... போல்வர் கயவர்" எனத் திகைத்து வருந்திப் போனாரோ!!
பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படுகின்ற கற்பழிப்பு உடல்சீண்டல் அமில வீச்சு போன்ற குற்றங்கள் நிகழ்த்துவதெல்லாம் ஆண்களாகவே இருப்பதால்
நல்ல ஆண்களை இனம் காண்பது என்பது தான் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட ஒரு பெண்ணின் முன் இருக்கின்ற மிக மிகப் பெரிய சவாலாக இருக்கக்கூடும். இவ்விஷயத்தில் பெண்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று சொல்லும் அதிசாமர்த்திய சாலிகளைப் பார்க்கும்போது அவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. நம் சமூகம்
ஆண் மேலாண்மை சமுகமாக இருந்தாலும் அதைப் பெரிதும் எதிர்க்காமல் சுமுகமுடன் ஏற்று வாழப் பழகிய பெண்ணினத்திற்கு இது போன்ற துன்பங்கள் தொடர்ந்து ஏற்படுவதென்பது ஆணை எதிரியாகவோ, ஒரு அச்சத்துடனோ நோக்க வேண்டிய சூழலையே உருவாக்குகிறது. இது ஆண்பெண் இணைந்த குடும்ப சமுகவாழ்வியலுக்கு பொருத்தமுடையதல்ல.
காடு மலை வயல் கடல் என அனைத்து நிலங்களையும் கண்ட அவ்வை ,ஆண்மேலாண்மை சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் அறமிழந்து மண், பெண், பொன் ஆசைகளில் விகாரப்பாட்டு கீழ்நிலை எய்தி இழிசெயல்கள் செய்து அழிவதைக் கண்டு மனம் வெந்து பாடினார். எவ்வழி நல்லை ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே அதாவது நல்ல ஆண்கள் வாழும் நிலம் தான் நன்றாக வாழும் என்று கூறி ஆண்கள் எல்லாரும் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் எல்லாரும் நல்லவர்களாக வாழ்ந்தால் தான் உலகம் நன்றாக வாழும் என்பதைத் துணிச்சலுடன் பதிவுசெய்தார். அக்காலம் முதல் இன்றுவரை எந்த ஒரு ஆண்படைப்பாளருக் கூட வெளிப்படையாக துணிவுடன் ஒப்புக்கொண்டு கற்பிக்க மறந்ததை மிகத்துனிவுடன் சொன்ன பெண் படைப்பாளி அவ்வையே ஆகும். இன்று இக்கருத்தை உரக்க ஆண்களுக்கு ஆண்களும் பெண்களும் பதிவு செய்ய வேண்டிய சூழலைத்தான் பெருகிவரும் பெண்ணுக்கெதிரான வன்முறைகள் உணர்த்துகிறது.
Comments
Post a Comment