Popular posts from this blog
சங்கத்தடம் - கற்புள்ள மலைநாடன்!!!
சங்க இலக்கியம் அக்கால ஆடவரின் பரத்தமையை சுட்டினாலும் ஒருத்தியையே விரும்பி அவளுடன் மட்டுமே நட்பு கொள்ளும் கற்புள்ள ஆடவரையும் அத்தகைய ஆண்மகனையே தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் பெண்ணின் திறத்தையும் படம் பிடிக்கத் தவறவில்லை. 'நிலத்தினும் பெரிதே' என்னும் குறுந்தொகை பாடல் சுட்டும் அழகான நட்பைக் காண்போம். அக்காலத்தில், காதல் உயர்வானதாகப் போற்றப்பட்டதால் நட்பு என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. மலைநாடனும் அன்புக்கினியாளும் காதல் கொண்டனர். காதல் வாழ்வு அவர்களுக்குக் கற்கண்டாய் இனித்ததாலோ என்னவோ, இருமன இணைவிற்குப் பின்னான திருமணத்தைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை. இதனால் தோழி வருந்தினாள். இவர்களின் அன்புப்பயிர் வளர நாளும் துணையிருந்து எவ்வித சிக்கலும் வராமல் காத்தவள் அவள்தான். இருப்பினும் இன்னும் எத்தனை நாள் தான் யாரும் அறியாமல் அவர்கள் சந்தித்துக் கொண்டிருப்பது, இவளும் காவல் காப்பது. ஒவ்வொரு முறையும், இக்காதல் பறவைகள் சந்திக்கும் போதெல்லாம்...
சங்கத்தடம் - குற்றம் காணாதது காதல்
மலரைப்போல் மென்மையான தலைவி ஒருத்தி, தன் மனதிற்கினியத் தலைவனுடன் எவருக்கும் தெரியாமல் சென்று விடுகிறாள். அவள் பிரிவால் பெற்ற தாயும், வளர்த்த தாயும் புலம்புகின்றனர். இருவர் பேச்சிலும் அவள் உலகம் அறியாப்பெண் ஆயிற்றே இப்போது கணவன் வீட்டில் என்ன செய்துகொண்டு இருக்கிறாளோ? எப்படி குடும்பம் நடத்துகிறாளோ? தெரியவில்லையே என்ற கவலையே அதிகம் இருந்தது. பக்கத்து ஊரில் தான், தங்கள் மகள் கணவனுடன் வாழ்கிறாள் என்பதை அவர்கள் அறிவார்கள். இருந்தாலும் கணவனுக்கும் குடும்ப மானத்திற்கும் பயந்து, பெற்றவளால் தன் மகளை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. செவிலியும் அவர்களிடம் சொல்லாமல் எப்படி போவது எனத் தயங்கி நின்றாள். இந்நிலையில் செவிலியால், நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கும் பெற்றவளின் மன வருத்தத்தைப் பார்க்க முடியவில்லை. தனது வளர்த்த பாசத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, பெற்றவளிடம் மட்டும் ரகசியமாகச் சொல்ல...
Comments
Post a Comment